ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் தரிசன யாத்ரா
தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகில் பழனி கொடைக்கானல் சாலையில் அமைந்துள்ள ரெங்கசாமி கரடு என்றழைக்கப்படும் குன்றின் மேல் அனந்த சயனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ ரெங்கநாத பெருமாளை தரிசனம் செய்ய நண்பர்கள் பாலு சபரிநாதன் சரவணனுடன் புறப்பட்டோம்.
மேலே செல்வதற்கு இரண்டு வழிகள் 1.பாலசமுத்திரம் வழி2.புளியமரத்து செட் வழி.புளியமரத்து செட் வழியில் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ளதால் பாலசமுத்திரம் வழியாகவே மலை ஏறினோம்.
மலையடிவாரத்தில் உள்ள தோப்பில் பைக்கை நிறுத்தி விட்டு சற்று தொலைவு நடந்து சென்று மலைப்பயணத்தை தொடங்கினோம்.
இந்த இடத்தில் மலையை மிதித்து ஏறும் எங்களை மன்னித்து இறைவன் தரிசனம் கிடைக்க மலையிடம் அனுமதி பெற்று காலை 7.00 மணிக்குஏறத் தொடங்கினோம்.
கரடு முரடான மலைப்பாதை உடலைக் கிழிக்கும் செடி கொடிகளுக்கிடையே சற்று சிரமமான பயணம்.
அலைபேசியில் கிருஷ்ண கானங்களை கேட்டபடி ஏறினோம்.
கோபால கிருஷ்ணன் சிலையைக் காண்கிறோம்.சூடமேற்றி வழிபட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
பயணத்தின் கடினமான ஏற்றம் இதுதான்.எதிர்திசையில் வெயில் படர்ந்த மலைகளும் பருந்துப் பார்வையில் ஊர்களும் அற்புதமான அனுபவம்.
இதோ சித்தர் பீடம். சித்தரை சூடமேற்றி வணங்கி மேலே நடந்தோம்.
இன்னுமொரு ஏற்றம்.
ஏறியவுடன் ரெங்கநாதரின் சன்னதி தெரிகிறது.விரைந்து நடக்கிறோம்.மணி 9.00
பூஜை மணியோசை ஒலிக்கிறது.விரிந்து படர்ந்த மரத்தின் கீழ் பாறையில் செதுக்கப்பட்ட அனந்த சயன திருக் கோலத்தில் பெருமாள்.தீபாராதனையில் கரைகிறது மனது.
தரிசனம் முடித்து அமர்கையில் சர்க்கரை பொங்கல் வெண் பொங்கல் பிரசாதம் கிடைக்கிறது.
இறைவனைத் தரிசித்து பின் இயற்கையை தரிசிக்கிறோம்.சற்று நேரம் சிறகுகள் விரித்து வான் வெளியில் பறக்கும் பறவையாகி வரதமா நதி அணை சர்ப்பமென வளைந்து வளைந்து செல்லும் கொடைக்கானல் சாலை பாலாறு புரந்தலாறு அணை பழனியின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் குடிநீர்த் தேக்கம் பழனி மலை இடும்பன் மலை பால சமுத்திரம் பழனி நகர் ஆகியவற்றை கண்டு மகிழ்கிறோம்.
மலை உச்சியில் உள்ள சுனையில் மழை பெய்யாததால் தண்ணீர் இல்லை
என்றாலும் பின்புறம் உள்ள வேறொரு சுனை நீர் அபிஷேகத்திற்கும் சமையலுக்கும் உதவுகிறது.
மீண்டுமொரு முறை இறைவனை தரிசித்து 10.30 மணி அளவில் இறங்க ஆரம்பிக்கிறோம்.
உச்சிப் பொழுதில் 12 மணியளவில் மலையடிவாரத்தை அடைந்தோம்.
தாகம் தணிக்க பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட நீர் இலவசமாக வழங்கினார்கள்.
அருகிலுள்ள தோப்பில் அன்னதானம் வழங்கினார்கள்.உண்டு மகிழ்ந்தோம்.
இறைவன் அருளால் யாத்திரை இனிதே நடந்தது.
பழனியிலிருந்து பாலசமுத்திரம் வழியாக சுமார் 6 கிமீ தொலைவு.
மேலே கடைகள் கிடையாது.எனவே தேவையான நீர் உணவுப் பொருள்களை எடுத்துச் செல்வதே சிறந்தது.
பாதையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் கவனம் தேவை
வெயிலுக்கு முன் ஏறுவதால் சற்று சிரமம் குறையும்

No comments:
Post a Comment