Sunday, 7 October 2012

கண்ணடி பெருமாள் கோவில்

கண்ணடி பெருமாள் கோவில் பழனி


பழனி கொடைக்கானல் சாலையில் வரதமாநதி அருகில் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது கண்ணடி பெருமாள் கோவில்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம்.


கோவிலில் பெருமாள் குழலுதும் கிருஷ்ணனாக அருள்பாலிக்கிறார்.பிறரது பொறாமை மற்றும் தீய எண்ணங்களினால் நமக்கு உண்டாகும் (கண் திருஷ்டி)தீமைகளிலிருந்து நம்மைக் காத்து அருள் பாலிப்பதால் கண்ணடி பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.ஆனால் தவறாக கண்ணாடி பெருமாள் என்று அழைக்கிறார்கள்.








மாடு ஈனும் முதல் கன்றை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவது இந்தப் பகுதியில் வாழம் மக்களின் வழக்கம்.


கருப்பண சாமி அருள் வழங்கும் சன்னதியும் அருகிலேயே உள்ளது





குன்றிலிருந்து பழனி மலை இடும்பன் மலையையும் வரதமாநதி அணையையும் கண்டு களிக்கலாம்







பழனியிலிருந்து 9 கிமீ தொலைவில் கொடைக்கானல் சாலையில் வரதமாநதி அணையை அடுத்து இடதுபுறமாக 2 கிமீ தொலைவு குளத்தின் கரையில் மண் பாதையில் சென்றால் குன்றினை அடையலாம்








No comments:

Post a Comment